சரவாக்கில் 4 புதிய ஓமிக்ரான் வைரஸ் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன

கூச்சிங், டிசம்பர் 24 :

சரவாக்கில் பி.1.1.1.529 அல்லது கோவிட்-19 ஓமிக்ரான் வைரஸ் மாறுபாடுடைய தொற்றுக்கள் மொத்தம் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக யூனிவர்சிட்டி மலேசியா சரவாக் (UNIMAS), சுகாதாரம் மற்றும் சமூக மருத்துவ நிறுவனத்தின் (ICHM) பணிப்பாளர் பேராசிரியர் டேவிட் பெரேரா தெரிவித்தார்.

பிந்துலுவில் இரு தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் நைஜீரியாவிலிருந்து திரும்பிய 52 வயது நபர், டிசம்பர் 19 அன்று கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் . மற்றையவர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து திரும்பிய 19 வயது ஆண்,டிசம்பர் 14 அன்று கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

“கூச்சிங்கில் மேலும் இரண்டு தொற்றுக்கள் கண்டறியப்பட்டன. UK இல் இருந்து திரும்பிய 25 வயது பெண் ஒருவர் சம்மந்தப்பட்டது மற்றும் இவருக்கு டிசம்பர் 22 அன்று கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது, நான்காவது வழக்கு சமீபத்தில் கண்டறியப்பட்டவரும் எங்கேயும் பயண செய்யாத பெண், இதன் மூலம் ஓமிக்ரான் உள்ளூரில் பரவுவதற்கான வாய்ப்பை இது காட்டுகிறது, ”என்று அவர் ஒரு அறிக்கையில் இன்று தெரிவித்தார்.

சரவாக் கோவிட்-19 ஆலோசனைக் குழுவின் (SCOVAG) உறுப்பினரான டாக்டர் பெரேரா கூறுகையில், சமூகத்தில் அதிக அளவில் பரவக்கூடிய ஓமிக்ரான் மாறுபாட்டின் உள்ளூர் பரவல் காரணமாக, பொது மக்கள் பண்டிகைக் காலங்களிலும் புது வருடத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

ஓமிக்ரான் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க, உடனடியாக தகுதியான அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை பெறுமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

“பொது சுகாதார SOPகள் (நிலையான இயக்க நடைமுறைகள்) கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் மற்றும் மேலும் சமூக பரவலை தடுக்க முடிந்தால் கூட்டங்களை தவிர்க்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here