வெள்ளம்: ஐந்து மாநிலங்களில் 33,000க்கும் மேற்பட்டோர் இன்னும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோலாலம்பூர், டிசம்பர் 27 :

நேற்றிரவு நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 33,193 பேர் இன்னும் ஐந்து மாநிலங்களில் உள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

சமூக நலத் துறையின் (JKM) InfoBencana விண்ணப்பத்தின்படி, வெள்ளத்தினால் வெளியேற்றப்பட்ட அனைவரும் சிலாங்கூர், பகாங், நெகிரி செம்பிலான், கிளந்தான் மற்றும் மலாக்காவில் உள்ள 206 நிவாரண மையங்களில் தங்கி உள்ளனர்.

சிலாங்கூரில் நேற்று மாலை நிலவரப்படி, 83 நிவாரண மையங்களில் 15,404 பேர் இருந்த நிலையில்,இன்று காலை 81 நிவாரண மையங்களில் 15,354 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மாலை 5 மணி நிலவரப்படி, 67 துப்புரவு நடவடிக்கைகள், 17 சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் 331 கண்காணிப்பு செயல்பாடுகளை நடத்தியது.

இதற்கிடையில், பிரதமர் துறை அமைச்சர் (சிறப்பு செயல்பாடுகள்) டத்தோ டாக்டர் அப்துல் லத்தீஃப் அஹ்மட் கூறுகையில், ஏராளமான தன்னார்வலர்கள், கம்போங் லபோஹான் தாகாங், பந்திங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுத்தம் செய்ய உதவினார்கள் என்றார்.

வெள்ளத்திற்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகளுக்கு தங்களது ஆற்றல் மற்றும் உபகரணங்களை வழங்கிய பல்வேறு அரசு சாரா நிறுவனங்களுக்கும் அப்துல் லத்தீஃப் நன்றி தெரிவித்தார்.

பகாங்கில், மொத்தம் 17,211 வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்கள் தற்போது ஆறு மாவட்டங்களில் உள்ள 119 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அதாவது பெந்தாங், டெமெர்லோ, பெரா, மாரான், குவந்தான் மற்றும் பெக்கான் ஆகிய இடங்களில் நிவாரண மையங்கள் அமைந்துள்ளன .

மாநில குடிமைத் தற்காப்புப் படையின் (APM) இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் (PA) முஹமட் சுக்ரி மட்நோரின் கருத்துப்படி, நெகிரி செம்பிலானில், 38 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேர் ஜெலேபுவில் உள்ள மூன்று நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

கிளந்தானில், இரவு 9 மணி நிலவரப்படி, 153 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 470 பேர் இன்னும் செக்கோலா கேபாங்சான் (SK ) டோக் டே மற்றும் SK குவால் பெரியோக் ஆகிய இடங்களிலுள்ள இரண்டு நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், பாசீர் மாஸ், ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள சுங்கை கோலோக் மற்றும் சுங்கை கிளந்தான் ஆகிய பகுதிகள் மட்டுமே எச்சரிக்கை நிலையில் இருப்பதாக நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை தகவல் (banjir portal) தெரிவித்துள்ளது.

மலாக்காவில், மாநில APM இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் (PA) கட்பேர்த் ஜாண் மார்ட்டின் குவாட்ரா கூறுகையில், SK பேங்குலு பெந்தேங்கில் உள்ள நிவாரண மையத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் இன்னும் இருப்பதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here