பின்னணி பாடகரும், நடிகருமான கணீர் குரலோன் மாணிக்க விநாயகம் காலமானார்

பிரபல சினிமா பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. இவரின் திடீர் மறைவு சினிமா உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

2001 ஆம் ஆண்டு விக்ரம் நடித்த தில் படத்தில் கண்ணுக்குள்ள கெளுத்தி பாடலை பாடி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாணிக்க விநாயகம். தனது கனீர் குரலால் தவசி, கண்ணத்தில் முத்தமிட்டால், ரன், ஜெயம், இயற்கை, தூள், திருப்பாச்சி, சிங்கம், வெயில் உள்ளிட்ட பல படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.

2003 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து, ரசிகர்களை கவர்தவர் மாணிக்க விநாயகம். பேரழகன், கிரி, திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், தோழி, வேட்டைக்காரன், பலே பாண்டியா, யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக 2017 இல் எண்பத்தி எட்டு படத்தில் நடித்தார் மாணிக்க விநாயகம்.

மாணிக்க விநாயத்தின் தந்தை வழுவூர் பி.ராமைய்யா பிள்ளையும் ஒரு நாட்டிய கலைஞர். மாணிக்க விநாயகத்தின் மாமாவும், இசை குழுவுமான சி.எஸ்.ஜெயராமனும் பிரபலமான ஒரு பாடகர்.

சென்னையில் வசித்து வந்த மாணிக்க விநாயகத்தின் மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியாவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here