இன்று காலை முதல் ஐந்து மாநிலங்களில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்படடவர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

கோலாலம்பூர், ஜனவரி 3 :

பகாங், ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் சபா ஆகிய இடங்களில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) தஞ்சமடைந்துள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்றை விட இன்று காலைமுதல் அதிகரித்து வருகிறது.

பகாங்கில், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் எட்டு மாவட்டங்களை சேர்ந்த 2,188 பேர் அங்குள்ள 51 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) தஞ்சமடைந்துள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது அலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்தம் 1,421 பேர் லிப்பிஸ் மாவட்டத்தில் 553 பேர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து ரோம்பின் (340 பேர்) மற்றும் ரவூப் (278 பேர்) மற்றும் 250 பேர் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

குவாந்தானில் உள்ள ஜாலான் சுங்கை லெம்பிங், ஜாலான் கோலாலம்பூர்-குவாந்தன் (மாரான்), ஜாலான் குவாந்தான்-செகாமாட் (பெக்கான்), ஜாலான் தெமெர்லோ-ஜெரான்டூட் (தெமெர்லோ) மற்றும் ஜாலான் பெந்தோங் -குவா மூசாங் (லிப்பிஸ்) உட்பட எட்டு சாலைகள் வெள்ளம் காரணமாக மூடப்பட்டன.

நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் ஆறு ஆறுகள் ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கிறது, மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் நாள் முழுவதும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மலாக்காவில், நேற்று இரவு 8 மணிக்கு 462 குடும்பங்களில் இருந்து 1,778 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 656 குடும்பங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,537 ஆக அதிகரித்துள்ளது.

ஜோகூரில், ஆறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று 2,553 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 3,841 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், சபாவில், நேற்றிரவு 599 குடும்பங்களில் இருந்து 1,823 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 874 குடும்பங்களில் இருந்து 2,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாநிலத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இதுவரை 23 பிபிஎஸ் திறக்கப்பட்டுள்ளதாக சபா மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோத்தா மருது உள்ளிட்ட மாவட்டங்களில் 520 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெகிரி செம்பிலானில், சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் பயன்பாட்டின் மூலம் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 505 குடும்பங்களில் இருந்து 1,892 நபர்களுடன் ஒப்பிடும்போது இன்று காலை 7 மணி நிலவரப்படி 554 குடும்பங்களைச் சேர்ந்த 2,041 நபர்களாக அதிகரித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் அங்குள்ள 22 பிபிஎஸ் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

திரெங்கானுவில், மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத்தின் தலைவர், லெப்டினன்ட் கர்னல் (PA) முகமட் ரோஸ்மன் அப்துல்லா கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 42 குடும்பங்களைச் சேர்ந்த 137 பேர் டங்கூனில் உள்ள 2 பிபிஎஸ்ஸில் இருந்ததாகக் கூறினார்.

சிலாங்கூரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40 பேர் கோல லங்காட் மாவட்டத்தில் நேற்று மீண்டும் திறக்கப்பட்ட இரண்டு பிபிஎஸ் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், publicinfobanjir.water.gov.my என்ற இணையதளம் இன்று காலை 6.45 மணி நிலவரப்படி, புக்கிட் சாங்காங், கோல லங்காட்டில் உள்ள சுங்கை லங்காட் பகுதி தற்போது 4.29 மீட்டராகவும், டெங்கில், சிப்பாங்கில் உள்ள சுங்கை லங்காட்டில் நீர்மட்டம் 7.7 மீட்டர் அளவில் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here