பதவியை ராஜினாமா செய்தார் சூடான் பிரதமர்!

சூடான், ஜனவரி 3:

சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக அப்தல்லா ஹம்டோக் பேசியபோது, நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் மற்றொரு நபருக்கு தேசத்தை வழிநடத்தும் வாய்ப்பை வழங்க முடியும். மக்கள் மற்றும் சைசுக்கு இடையில் விரிவடைந்து வரும் இடைவெளியைக் குறைப்பதற்கும் அரசியல் சக்திகளுக்கு இடையேயான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும் நான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

நாடு பேரழிவை நோக்கிச் செல்வதைத் தடுக்க என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். இப்போது, ​​நம் தேசம் ஒரு ஆபத்தான திருப்புமுனையை கடந்து கொண்டிருக்கிறது, அது அவசரமாக சரிசெய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அவரது இந்த ராஜினாமா பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் சூடானை அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here