புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பிரான்ஸில் 874 கார்கள் தீ வைத்து எரிப்பு!

பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மொத்தம் 874 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டில் மொத்தம் 1,316 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அதனுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு இவ்வாறான சம்பவங்கள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெருமளவான தீவைப்பு முயற்சிகள் போலீசாரால் இவ்வாண்டு தடுத்து நிறுத்தப்பட்டன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2005இல் பல நகரங்களில் நடந்த புத்தாண்டு கலவரத்தை தொடர்ந்து, இக்காலப்பகுதியில் கார் எரிப்பு என்பது பிரெஞ்சு புறநகர்ப் பகுதிகளில் ஆண்டு தோறும் நடக்கும் நிகழ்வாக மாறியுள்ளது.

இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க கடந்த புத்தாண்டு கொண்டாட்ட காலப்பகுதியில் சுமார் 32,000 தீயணைப்பு வீரர்கள், 95,000 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி கடந்த 31ஆம் திகதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 874 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக அனைத்துலக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here