தைவானில் நிலநடுக்கம்; 20 விநாடிகள் கட்டடங்கள் குலுங்கின!

தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹுயலியென் நகரத்திற்கு கிழக்கே 56 கி.மீட்டர் தூரத்தில், இன்று காலை 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து 19 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுடிருந்தது.

இதனால் 20 விநாடிகள் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் மிகவும் அச்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி தகவல் எதுவும் அறியமுடியவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டு இதே பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்ததுடன் 300 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here