வெள்ள நிவாரண உதவிகளை பெறுவதற்காக பொய்யான தகவல்களுடன் விண்ணப்பித்த பெண்ணிடம் போலீஸ் விசாரணை

குவாந்தான், ஜனவரி 4 :

சமீபத்தில் தெமெர்லோவில் உள்ள மெந்தக்காப் என்ற இடத்தில் அரசு சாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களிடம் இருந்து வெள்ள நிவாரண உதவிகளை பெறுவதற்காக, ஒரு பெண் தவறான தகவல்களை கூறி வெள்ள நிவாரண உதவிக்கு விண்ணப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பகாங் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் முகமட் வசீர் முகமட் யூசோப் கூறுகையில், 33 வயதான பெண், டிசம்பர் 29 அன்று தெமெர்லோவில் உள்ள நிவாரண மையத்தில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் உதவி பெற விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது.

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளின் தனித்து வாழும் தாய் என்றும், தான் எந்த உதவியும் பெறவில்லை என்று கூறி, சந்தேக நபர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஏமாற்றினார்.

“இந்த விண்ணப்பம் மூலமாக அந்த NGO அந்தப் பெண்ணிற்கு சில நிதி உதவிகளையும், உணவுப் பொருட்கள், போர்வைகள், தலையணைகள் மற்றும் RM700 மதிப்புள்ள டேபிள் ஃபேன், பிளென்க்டர் மற்றும் ரைஸ் குக்கர் போன்ற மின் உபகரணங்களையும் வழங்கினர்” என்று அவர் இன்று, ஒரு அறிக்கையில் கூறினார்.

எவ்வாறாயினும், அந்தப் பெண் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் அல்ல என்றும், அவர் தனது விண்ணப்பத்தில் அளித்த முகவரி அவருடையது அல்ல என்றும் பொதுமக்களிடம் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் புகார்களைப் பெற்றுள்ளது என்றார்.

NGO உறுப்பினர்களில் ஒருவரின் சோதனையில், அந்தப் பெண் மற்றய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவிக்கும் விண்ணப்பித்திருப்பது கண்டறியப்பட்டது, இது புகார்தாரரை போலீஸ் புகாரை பதிவு செய்ய தூண்டியது என்று முகமட் வாசிர் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் காலியான ஒரு வீட்டு முகவரியை வழங்கியுள்ளதாகவும், அந்த பெண் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பதை கிராமத் தலைவர் உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 420ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here