சகோதரனை கொலை செய்ததாக வேலையில்லாத ஆடவர் மீது குற்றச்சாட்டு

தனா மேரா, ஜனவரி 5 :

கடந்த மாதம் ஜெலியின் கம்போங் மலாயு சுங்கை ருவாலில் உள்ள ஒரு வீட்டில், தனது சகோதரனைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வேலையில்லாத ஒருவருக்கு எதிராக, இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர், தாய்லாந்து நாட்டவரான மசோபி மசே, 36, என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிபதி முகமட் நசாருடின் முகமட் முன்நிலையில் வாசிக்கப்பட்டபோது, அவர் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தார்.

குற்றச்சாட்டின்படி, டிசம்பர் 29 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் ஜெலியின் கம்போங் மலாயு சுங்கை ரூலில் உள்ள ஒரு வீட்டில், மா-உதெங் மசே (30) என்பவரைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்து.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையை வழங்க வழி செய்கிறது.

துணை அரசு வழக்கறிஞர் நசுஹா முகமட் நசீர் இந்த வழக்கை தொடர்ந்தார், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

குற்றஞ்சாட்டப்பட்டவரை மனநலப் பரிசோதனைக்காக பேராக் பஹாகியா உலு கிந்தா மருத்துவமனைக்கு அனுப்புமாறு அரசுத் தரப்பினரை வழக்கறிஞர் நசுஹா கேட்டுக்கொண்டார்.

பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரை பஹாகியா உலு கிண்டாவுக்கு மருத்துவமனைக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதித்தது. அத்தோடு ஜனவரி 30 ஆம் தேதிக்கு வழக்கை நீதிமன்றம் தள்ளிவைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here