நாட்டில் 88 விழுக்காடு இளம் பருவத்தினர் கோவிட் -19 தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டுள்ளனர்

கோலாலம்பூர், ஜனவரி 12 :

நேற்று வரையுள்ள நிலவரப்படி, நாட்டில் உள்ள இளம் பருவத்தினர் அல்லது 12 முதல் 17 வயதுக்குட்பட்ட மொத்தம் 2,768,673 நபர்கள் அல்லது 88 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டுள்ளனர்.

CovidNow போர்ட்டலில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின் அடிப்படையில், 2,858,109 நபர்கள் அல்லது 90.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

பெரியவர்களை பொறுத்தவரை, 22,889,297 தனிநபர்கள் அல்லது 97.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 23,172,722 தனி நபர்கள் அல்லது 99 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here