பாசீர் மாஸில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு ஓட்டுநர்களும் மரணம்

கோத்தா பாரு, ஜனவரி 17 :

நேற்றிரவு இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களான 17 வயது மாணவர் மற்றும் வாகனங்கள் பழுதுபார்ப்பவர் (மெக்கானிக்) ஒருவரும் உயிரிழந்தனர்.

இரவு 11.30 மணியளவில் கம்போங் பங்கல் காலாவில் இந்த சம்பவம் நடந்ததாக பாசீர் மாஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் நசாருடின் முஹமட் நசீர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் பலியானவர்கள் தஹ்ஃபிஸ் மாணவர் முஹமட் அமிருல் ஹக்கீம் அப்துல்லா மற்றும் முகமட் ஐசத் அப்துல் கானி என அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.

தலைக்கவசம் அணியாததால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவருக்கும் தலை மற்றும் உடல்களில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

“வாகனம் பழுதுபார்ப்பவர் கெலாங் மாஸில் இருந்து புனுட் சுசுவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த மற்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

“விபத்து ஏற்பட்டபோது, இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகளும் அதிவேகமாக ஓட்டிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக பாசீர் மாஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here