விபசாரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 12 தாய்லாந்து நாட்டு பெண்கள் உட்பட 14 வெளிநாட்டினர் கைது

கோலாலம்பூர், ஜனவரி 19 :

நேற்று சுபாங் ஜெயாவைச் சுற்றியுள்ள இரண்டு விபச்சாரக் விடுதிகள் என நம்பப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட “Ops Gegar” நடவடிக்கையின் கீழ் 14 வெளிநாட்டினரை குடிநுழைவுத்துறையினர் கைது செய்துள்ளனர். அதில் 13 பெண்கள் மற்றும் ஒரு ஆணும் அடங்குவர்.

கைது செய்யப்பட்டவர்களில் 12 தாய்லாந்து பெண்கள், ஒரு மியன்மார் நாட்டுப் பெண் ஒரு பிரிட்டிஷ் ஆண் ஆகியோர் அடங்குவர். கைது செய்யப்பட்ட அனைவரும் 21 முதல் 69 வயதுடையவர்கள்.

நேற்று இரவு 8.45 மணிக்கு சுபாங் ஜெயாவிலுள்ள பட்ஜெட் ஹோட்டல்களில் ‘Ops Gegar’ சோதனைகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதாக குடிநுழைவுத்துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ கைருல் டிசைமி தாவுத் தெரிவித்தார்.

இந்த வளாகத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் ஆதரவளிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

“பாலியல் சேவைத் வழங்குவதற்கு 45 நிமிடத்திற்கு RM200 முதல் RM270 வரையிலும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரையிலான ‘அவுட்கால்ஸ்’ சந்தாவுக்கு RM950 வரையிலும் வழங்கப்படுகிறது என்றும் இதற்கு இணையதளம் மற்றும் டெலிகிராம் மூலம் வாடிக்கையாளர் முன்பதிவு செய்யப்படுகிறது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சோதனையின் போது, ​​அனைத்து பெண்களும் தப்பிப்பதற்காக பல்வேறு காரணங்களைக் கூறியும் அறைக் கதவுகளைத் திறக்க மறுத்ததாகவும் கைருல் டிசைமி கூறினார்.

கைதிகள் அனைவரும் புக்கிட் ஜலில் குடிவரவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்த வழக்கு ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்புச் சட்டம் (ATIPSOM), குடிவரவுச் சட்டம் 1959/63, பாஸ்போர்ட் சட்டம் 1966 மற்றும் குடிவரவு விதிமுறைகள் 1963 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று  அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here