ஜாஹிட் அனைத்து 47 குற்றச்சாட்டுகளிலும் தற்காப்பு வாதம் செய்ய உத்தரவு

முன்னாள் துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி எதிர்நோக்கி இருக்கும் 47 ஊழல், குற்றவியல் நம்பிக்கை மீறல் (CBT) மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்வாதம் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுயிரா (Collin Lawrence Sequerah), ஜாஹிட் மீது அரசுத் தரப்பு ஆதாரங்களோடு தனது தரப்பு வழக்கை நிரூபித்துள்ளது என்று தீர்ப்பளித்தார்.

ஜாஹிட், யாயாசான் அகால்புடி (Yayasan Akalbudi) அறவாரியத்தில் இருந்து மில்லியன் கணக்கான பணமோசடி மற்றும் நம்பிக்கை மோசடி (CBT) சம்பந்தப்பட்ட 47 குற்றச்சாட்டுகளில் விசாரணையை எதிர்கொள்கிறார்.

மேலும் அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு திட்டங்களுக்கு லஞ்சம் பெற்றார் என மேலும் 12 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள், எட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். எஞ்சிய குற்றச்சாட்டுகள் பணமோசடி தொடர்புள்ளவையாகும்.

நவம்பர் 18, 2019 அன்று தொடங்கிய விசாரணையில் இதுவரையில் மொத்தம் 99 சாட்சிகள் சாட்சியமளித்தனர். தற்காப்பு வாதத்திற்கான விசாரணை மார்ச் 28-ஆம் தேதி தொடங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here