கனமழை காரணமாக 5 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன – 6 கார்கள் சேதம்

கோலாலம்பூரில் நேற்று பிற்பகல் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் ஐந்து பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையத்தின் கூற்றுபடி, மாலை 4 மணியளவில் Sekolah Rendah Wangsa Jaya Seksyen 4 in Wangsa Maju, Karak Highway before the Gombak Toll Plaza, Ampang MRR2 Flyover, PSN Rejang Setapak Jaya and Jalan Padang Tembak ஆகிய இடங்களில் சம்பவங்கள் நடந்தன.

மரங்கள் விழுந்ததில் ஆறு வாகனங்கள் சேதமடைந்தன, இது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. பாதிக்கப்பட்ட பாதைகளில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணி மாலை 5.51 மணிக்கு நிறைவடைந்தது, என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விழுந்த மரங்களை அகற்றும் பணியில் வாங்சா மஜு, கோம்பாக் செலாத்தான், சிகாமட் மற்றும் ஸ்தாப்பாக் ஆகிய நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here