மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பினாங்கு பாலத்தில் நண்பரின் காரை கவிழ்க்க காரணமான சிகையலங்கார நிபுணருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
24 வயதான வைத்தீஸ்வரன் எம். குமாரதேவன் ரிங்கிட் 10,000 அபராதம் செலுத்த வேண்டும் அல்லது கூடுதலாக 12 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அவரது ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஹ்சா ஃபாரிஸ் அஹ்மத் கைருதீன் உத்தரவிட்டார்.
ஜனவரி 20, 2019 அன்று அதிகாலை 3 மணிக்கு பினாங்கு பாலத்தின் கி.மீ 4இல் (பிஃராய் நோக்கிச் செல்லும்) இடத்தில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மோய் யுன் பெங் 20, என்பவரின் மரணத்தை ஏற்படுத்தியதாக வைத்தீஸ்வரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.