பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி பெரிகாத்தான் நேஷனல் (PN) இளைஞர் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஒரு அறிக்கையில், PN பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுடின், ஃபத்லியை நியமிக்கும் முடிவு “ஒருமனதாக” இருந்தது என்றார். PN ஆனது பெர்சத்து, PAS, கெராக்கான் மற்றும் சபா அடிப்படையிலான கட்சிகளான STAR மற்றும் SAPP ஆகியவற்றை உள்ளடக்கியது.
பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினரான ஃபத்லி, கைரில் நிஜாம் கிருதினுக்குப் பதிலாக உடனடியாக பதவிக்கு வந்துள்ளார். கைரில் ஒரு செனட்டர் மற்றும் பாஸ் தகவல் தொடர்பு பிரிவுத் தலைவர். கோலாலம்பூரில் உள்ள கூட்டணியின் தலைமையகத்தில் PN தலைவர் முஹிடின் யாசின் ஃபாத்லியிடம் நியமனக் கடிதத்தை வழங்கினார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் பாஸ் இளைஞர் பிரிவின் புதிய தலைவராக ஃபாத்லி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்பொழுது கைரில் இடம் இருந்து பெரிகாத்தான் நேஷனல் (PN) இளைஞர் தலைவராக பொறுப்பேற்றார்.









