பேராக், சிலாங்கூர் உட்பட நாட்டின் பல மாநிலங்களில், இன்று பிற்பகல் முதல் இரவு வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்- மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர், ஜனவரி 29 :

நாட்டின் பல மாநிலங்களில் இன்று பிற்பகல் முதல் இரவு வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர் கூட்டரசுப் பகுதி, புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலங்கள் இந்த மழையை பெறும் என்று மெட்மலேசியாவின் இயக்குநர் ஜெனரல் முஹமட் ஹில்மி அப்துல்லா கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, சபாவின் மேற்குப் பகுதி, வடக்கு மற்றும் மத்திய சரவாக்கிலும் இதேபோன்ற வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இதற்கிடையில், பிலிப்பைன்ஸின் பலவான் தீவின் மேற்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது வலுவிழந்து, அடுத்த 24 மணி நேரத்தில் அந்நாட்டை விட்டு நகரும் என்றும் அவர் கூறினார்.

“இது மெட்மலேசியா வானிலை ஆராய்ச்சி மற்றும் முன்கணிப்பு மாதிரி (MET-WRF), நடுத்தர தூர வானிலை முன்னறிவிப்புக்கான ஐரோப்பிய மையம் (ECMWF) மற்றும் உலகளாவிய முன்கணிப்பு அமைப்பு (GFS) ஆகியவற்றின் பகுப்பாய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது.

“இதன் விளைவாக, தீபகற்ப மலேசியாவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாநிலங்களில் வெப்பமான மற்றும் வறண்ட வானிலை ஏற்படும்” என்று அவர் கூறினார்.

மேலதிக தகவல்களுக்கு மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளம், www.met.gov.my மற்றும் அதன் அனைத்து சமூக ஊடகங்களையும் பார்க்கவும், அத்துடன் சமீபத்திய மற்றும் உண்மையான தகவலுக்கு myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here