கோவிட்-19 தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் வெடித்த போராட்டம்; இரகசிய இடத்திற்கு தப்பிய கனேடிய பிரதமர்

ஒட்டாவா, ஜனவரி 30:
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கனடாவில் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக எல்லை தாண்டி செல்லும் டிரக் ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 
இத்தகைய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கனடா மக்கள் குறிப்பாக டிரக் ஓட்டுநர்கள் போராட்டத்தில் குதித்தனர். கனடாவின் தலைநகர் ஒட்டாவில் உள்ள பாராளுமன்ற ஹில் பகுதியில் கூடிய போராட்டக்கார்கள்  பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதை காண முடிந்தது.
போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில்  இருந்து வெளியேறியதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜஸ்டின் ட்ரூடோ  குடும்பத்தினருடன் ரகசிய இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடும் குளிர் நிலவி வரும் சூழலிலும், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரகள் ஊடுருவினர். இதனால், வன்முறை ஏற்படும் அபாயம் இருப்பதால் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டிரக் ஓட்டுநர்களின் இந்த ஆர்ப்பாட்டமானது நாட்டு நலனுக்கும், அறிவியலுக்கும் சமூகத்திற்கும் எதிரானது என பிரதமர் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

இதனிடையே, பிரதமர் ட்ரூடோ இரகசிய இடத்திற்கு செல்லவில்லை எனவும், அவர் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் வீட்டில் இருந்தே பணியாற்றுவதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here