நிலையற்ற கூட்டணி அரசியலை நிராகரியுங்கள்: முகமட் சாபு வேண்டுகோள்!

கோலாலம்பூர்,

சுயநலத்திற்காக அடிக்கடி அரசியல் கூட்டணிகளை மாற்றி அமைக்கும், முதலில் திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து செய்யும் அரசியலை வாக்காளர்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என அமானா தலைவரும் பக்காத்தான் ஹரப்பான் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ முகமட் சாபு கேட்டுக்கொண்டுள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பாஸ் (PAS) கட்சியைக் மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, அடிக்கடி கூட்டணிகளை மாற்றுவது நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கும் என எச்சரித்தார்.

பாரிசான் நேஷனல், பாக்காத்தான் ரக்யாட் பெர்சாத்து என மாறி மாறி கூட்டணிகளை முறித்துக் கொள்ளும் இத்தகைய போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பாக்காத்தான் கூட்டணி அனைத்து இன மக்களுக்கும் சமமான சேவையை வழங்கி வருவதாகச் சுட்டிக்காட்டிய நெகிரி செம்பிலான் இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன், தாம் ‘டிஏபி-யின் பொம்மை’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையும் திட்டவட்டமாக மறுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here