பூலாவ் புரூங் குப்பைக் கிடங்கில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது; வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் தகவல்

நிபோங் தெபால், பிப்ரவரி 2 :

ஜனவரி 12ஆம் தேதி அன்று தீப்பிடித்த பூலாவ் புரூங் குப்பைக் கிடங்கு இன்று முழுமையாக அணைக்கப்பட்டது என்று வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் டத்தோஸ்ரீ ரீச்சல் மெரிக்கான் நைனா மெரிக்கான் இன்று காலை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

“இறைவனின் கிருபையால் (Alhamdulillah), பூலாவ் புரூங் குப்பைக் கிடங்கில் தீயை அணைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

“இதற்காக #WiraMerah பினாங்கு குழு மற்றும் பல்வேறு கூட்டாட்சி மற்றும் மாநில அமைப்புகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

மூன்று வாரங்களுக்குப் பிறகு, நேற்று 98 சதவீத நிலப்பரப்பில் பரவியிருந்த தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது.

ஜனவரி 12 ஆம் தேதி நடந்த சம்பவத்தில், 11.3 ஹெக்டேர் நிலப்பரப்பில் தீப்பிடித்தது, அதன் அருகே காற்றின் தரம் மோசமடைந்தது, இது மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்த தீ விபத்தால் அப்பகுதி தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் நிலை 1 பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டது.

குப்பைக் கிடங்கு அருகே உள்ள இரண்டு கிராமங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்து புகை மாசு காரணமாக திறக்கப்பட்ட இரண்டு தற்காலிக வெளியேற்ற மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்திருந்தனர்.

இதற்கிடையில், நேற்றிரவு மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) இணையதளத்தின் படி, SK (T) Ladang Byram இல் அமைந்துள்ள தற்காலிக மையங்கள் மிதமான காற்று மாசுக் குறியீடு (API) 100 க்குக் கீழே இருப்பதைக் காட்டிஇருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here