நான் குணமடைந்து வருகிறேன் – ஆனால் முழுமையாக இல்லை என்கிறார் மகாதீர்

 முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தேசிய இதய நிறுவனத்தில் (IJN) சிகிச்சை மற்றும் குணம் அடைந்து வருகிறார் என்று ட்விட்டரில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது வீட்டில் இருந்து பேசும் வீடியோவும் @chedetofficial கணக்கு மூலம் பகிரப்பட்டது.‘அந்த காணொளியில், நான் “குணமடைந்துவிட்டேன், ஆனால் முழுமையாக இல்லை” என்று விளக்குகிறார்.

செவ்வாய்க்கிழமை முதல், பிசியோதெரபி அமர்வுகள் மற்றும் IJN இல் நான் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடைமுறைகளுக்கு இடையில் பகலில் வீடு திரும்ப மருத்துவர்கள் என்னை அனுமதித்தனர் என்று அவர் கூறினார். அவர் இன்னும்  சிகிச்சையில் உள்ளதால், உடனடி குடும்ப உறுப்பினர்களைத் தவிர, வீட்டிலோ அல்லது IJN-லோ பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

அவரது மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி, அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைத்து நலம் விரும்பிகளுக்கும் குடும்பத்தினரின் நன்றியைத் தெரிவித்தார்.

மகாதீர் ஜனவரி 22 அன்று IJN இன் கரோனரி கேர் யூனிட்டில் (CCU) அனுமதிக்கப்பட்டார். ஆனால் நான்கு நாட்களுக்குப் பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here