இந்தோனேசியாவில் பேருந்து விபத்து; 13 பேர் பலி, பலர் படுகாயம்!

ஜகார்த்தா, பிப்ரவரி 7:

இந்தோனேசியாவின் பந்துல் மாவட்டத்தில், யோக்யகர்த்தா நகரில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென இன்று சாலை விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனை தேசிய தேடுதல் மற்றும் மீட்பு படையின் செய்தி தொடர்பாளர் யூசுப் லத்தீப் உறுதி செய்துள்ளார். விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை. இதுபற்றி போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here