கோலாலம்பூர், பிப்ரவரி 7:
இன்று முதல் பிப்ரவரி 20 வரை பகாங்கின் தெமெர்லோவில் உள்ள தாமான் ரிம்பா, மெந்தக்காப்பில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (EMCO) அமல் படுத்தப்படுகிறது என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் (MKN) இயக்குநர் ஜெனரல் டத்தோ ரோட்ஸி முகமட் சாட் தெரியவித்துள்ளார்.
கோவிட்-19 இடர் மதிப்பீடுகள் மற்றும் தொற்றுக்களின் போக்குகள் குறித்து சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பை தொடர்ந்து இந்த மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது என்று ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.
பகாங்கின் ரோம்பினில் உள்ள தொழில் கல்லூரி, சுல்தான் அஹ்மத் ஷாவில் உள்ளமேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை திட்டமிட்டபடி இன்று முடிவடையும் என்று, முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.