தலைநகரின் பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள கட்டடத்தில் இருந்து விழுந்த பெண்; உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்!

கோலாலம்பூர், பிப்ரவரி 7 :

இன்று, ஜாலான் துன் சம்பந்தன், பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஒரு கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து விழுந்ததாக நம்பப்படும் ஒரு பெண், உடல் மற்றும் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர் கூறுகையில், காலை 6.41 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தமது துறைக்கு தகவல் கிடைத்தது.

“30 வயதுடைய பெண் ஒருவர் மாடியில் இருந்து விழுந்து, கட்டடத்தின் முகப்பில் காணப்பட்டதாக பொதுமக்களிடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

“முதற்கட்ட விசாரணையில், பெண்ணின் உடல் மற்றும் தலை சிதறியுள்ளது, இது கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்ததன் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அந்தப் பெண்ணின் அடையாள ஆவணங்கள் எதுவும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் (UMMC) தடயவியல் மருத்துவத் துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அமிஹிசாம் கூறினார்.

“இது தொடர்பில் எந்தவொரு நிச்சயமற்ற மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்தியையும் ஊகிக்க வேண்டாம் மற்றும் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்”.

“இந்த வழக்கு தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) செயல்பாட்டு அறையை 03-22979222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here