கோத்தா கினாபாலு, பிப்ரவரி 7 :
நேற்று முதல் தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட 6 கிராமங்களில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 311 பேர் தங்குவதற்கு பிதாஸில் 3 தற்காலிக நிவாரண மையங்கள் (PPS) திறக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, டேவான் செக்கோலா கேபாங்சான் (SK) பெக்கான் பித்தாஸ் II மையத்தில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேரும் SK ருகோம் மண்டபத்தில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 135 பேரும் மற்றும் குசிலாட் கிராம மண்டபத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேரரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று சபா பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 தற்காலிக நிவாரண மையங்களும் நேற்று நண்பகல் திறக்கப்பட்டன.