மகாதீர் பேச்சு விடிஞ்சா போச்சு!

ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ஆசியா டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், டாக்டர் மகாதீர், மலேசிய சீனர்கள் செல்வந்தர்கள், அவர்களில் பெரும்பாலோர் நகர்ப்புற  வாழ்க்கையில் இருப்பவர்கள் என்று கூறியிருக்கிறார், இது, ஆரோக்கியமற்ற வார்த்தையாக இருக்கிறது. அதைத்தான்  ம சீ ச தலைவர் வீ கா சியோங் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஒவ்வொரு நாளும், பல்லாயிரக்கணக்கான மலேசிய சீனர்கள் சிங்கப்பூருக்குச்சென்று வேலை பார்க்கின்றனர். இவர்கள் சாதாரண ஊதியம் பெறுபவர்கள், நேர்மையான வாழ்க்கைக்குச் சம்பாதிக்க, அங்கு சென்று வேலை பார்க்கிறார்கள். அந்த வகையில் மட்டுமே சீனர்கள் செலவந்தர்களாக இருக்க முடியும். உண்மையில் சீனர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள்.

பசார் மலாம்,  தோட்டங்கள்,தாமான்களில் உள்ள சிறிய கடை  உரிமையாளர்கள் பணக்காரர்களாக இல்லை, சற்று கூடுதல் வருமானம் பெறும் வியாபாரம் செய்கின்றவர்கள் மட்டுமே!

மலேசிய சீனர்களின் மீது இதுபோன்ற தவறான,  பாரபட்ச நிந்தனையான கதைகளை யாரும்  நம்ப மாட்டார்கள். உழைப்பால் கிடைக்கும் பணத்தை செல்வம் என்ற பொருளில் சேர்க்கக் கூடாது.

இதுபோன்ற செய்திகளால் வெவ்வேறு இனங்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் சீர்குலைய  வழிவகுக்கும் .  இறுதியில் மதிப்பற்ற பேச்சுகளால் நாட்டுக்கு நன்மை தராது என்றும் அவர் கூறினார்.

அரசியல்வாதிகள் பகிரங்கமாகப் பேசும்போது எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,

சீன வணிகங்களுக்கு எதிராக வெறுப்பையும் பகைமையையும் இதுபோன்ற பேச்சுகள் தூண்டக்கூடும், மேலும் நாட்டின் வளப்பத்திற்கு உகந்ததாகவும் இருக்காது என்று அவர் தமது அறிக்கையில் தெரிவித்தார்.

அன்றைய அரசாங்கத்தின் கொள்கைகளைத் தவிர, ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான கடின உழைப்பும் உறுதியுமே செல்வத்தை அடைவதற்குக் காரணமாக் இருந்தது. அரசாங்க குத்தைகைகள் அதிகமாக இல்லை. தனியார் குத்தகைகளில் இரவுபகல் பாராமல் உழைத்து செல்வம் சேர்த்தவர்கள் சீனர்கள். உழைக்காமல் செலவம் சேர்த்ததில்லை.

பணக்காரர்கள் , நன்றியற்றவர்கள்,  இவர்கள்  வெளிநாட்டவர்கள் என்பதன் நோக்கம் என்ன? சீனாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்,என்றால் அதன் அர்த்தம் என்ன? சீனர்கள் குண்டர்கள் நேர்மையற்ற அரசியல்வாதிகள் என்பதெல்லாம் இன வாத பேச்சுகள் என்பதை மக்கள் அறிவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here