இங்கிலாந்தின் அடுத்த மகாராணி ‘கமிலா’; எலிசபெத் மகாராணி விருப்பம் தெரிவிப்பு!

லண்டன், பிப்ரவரி 7 :

இங்கிலாந்தின் அடுத்த மகாராணியாக, இளவரசர் சார்ல்ஸின் மனைவியான கமிலா பட்டம் சூட்டவேண்டும் என்று இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்

95வயதான, இங்கிலாந்து நாட்டில் ராணியாக இருக்கும் 2-ம் எலிசபெத், இங்கிலாந்து மன்னராக இருந்த ஆறாம் ஜோர்ஜின் மகளாவார்.

மன்னர் ஆறாம் ஜோர்ஜ், 1952-ம் ஆண்டு பெப்ரவரி 6ம் திகதி இறந்த பின்னர், 2-ம் எலிசபெத்,தமக்கு 25வயதாக இருக்கும் போது மகாராணி பட்டத்தை பெற்றார்

தற்போது அவர் மகாராணி பட்டத்துக்கு வந்து 70 ஆண்டுகள் ஆகின்றன.

இதனை முன்னிட்டு இங்கிலாந்து முழுவதும் வரும் ஜூன் மாதம் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்தநிலையில் மகாராணி விடுத்துள்ள செய்தியில், இளவரசர் “சார்லஸ் மன்னர் ஆகிறபோது, மகாராணி பட்டத்தை கமிலா பெற வேண்டும் என்பது எனது உண்மையான விருப்பம்” என தெரிவித்துள்ளார்.

சார்லஸ், கமிலா இருவருமே தங்கள் முந்தைய வாழ்க்கைத் துணைவர்களை விவாகரத்து செய்து மறுமணம் செய்தவர்கள் என்பதால் இந்த பதவிநிலை தொடர்பாக சந்தேகங்கள் எழுந்தன.

பல்வேறு விதமான கருத்துகளும் கூறப்பட்டன.

சார்லஸ் மன்னரானாலும், கமிலா ‘இளவரசி ’ என்றே அழைக்கப்படுவார் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிந்தது…

இப்போது 2-ம் எலிசபெத் மகாராணியே கமிலாவை ராணி என அழைக்க விருப்பம் என்று கூறி விட்டதால் இனி அவர் மகாராணி பட்டம் பெறுவதில் பிரச்சினை ஏதும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here