பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தங்களது டிஜிட்டல் கோவிட்-19 தடுப்பூசி சான்றுகளை அங்கீகரிக்க மறுத்ததால், பதின்மூன்று மலேசியர்கள் தற்போது மணிலாவின் நினோய் அகினோ அனைத்துலக விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கின்றனர். நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து பயணித்த 15 பேர் கொண்ட குழுவில் 13 மலேசியர்கள் இருந்ததாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
MySejahtera செயலியில் உள்ள மலேசிய டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ் தடுப்பூசி போட்டதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டதால், அவர்கள் அந்நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
அவர்களது கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், செவ்வாய்க்கிழமை நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் மலேசிய செய்தித்தாளிடம் தெரிவித்தனர். 15 பயணிகளில் 13 பேர் மலேசியர்கள் மற்றும் இருவர் வெளிநாட்டினர். வணிகம், தனிப்பட்ட மற்றும் மனிதாபிமான காரணங்களுக்காக பிலிப்பைன்ஸுக்குச் செல்ல விரும்பினர்.
பிலிப்பைன்ஸ் குடிநுழைவுத்துறை அதிகாரிகள், தூதரகம் திங்கள்கிழமை காலை (பிப்ரவரி 14) வரை காத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அனுமதி பெற வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது.