மத்திய கிழக்கு பதற்றம்: 10 நாடுகளுக்கான பயண எச்சரிக்கை நீட்டிப்பு! மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா முக்கிய அறிவுறுத்தல்.

கோலாலம்பூர் | மார்ச் 09, 2026:

மத்திய கிழக்கில் அதிகரிந்து வரும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் மோதல்கள் காரணமாக, 10 நாடுகளுக்கு மலேசியர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு விஸ்மா புத்ரா விடுத்துள்ள பயண எச்சரிக்கை (Travel Advisory) மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்ட10 நாடுகளில்;

  1. ஈரான் (Iran)
  2. ஈராக் (Iraq)
  3. ஜோர்டான் (Jordan)
  4. குவைத் (Kuwait)
  5. கத்தார் (Qatar)
  6. பஹ்ரைன் (Bahrain)
  7. ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
  8. லெபனான் (Lebanon)
  9. ஓமன் (Oman)
  10. சவூதி அரேபியா (Saudi Arabia) என்பன அடங்கும்.

மேலும், தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த நாடுகளுக்கு மேற்கொள்ளும் பயணங்களைத் தள்ளி வைக்குமாறு மலேசியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது உம்ரா (Umrah) அல்லது ஜியாரா (Ziarah) மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளவர்களுக்கும் பொருந்தும் என்றும் அது தெரிவித்துள்ளது.

அந்தந்த நாடுகளில் உள்ள மலேசியர்கள் உடனடியாகத் தங்களின் விவரங்களை அருகில் உள்ள மலேசியத் தூதரகத்திலோ அல்லது e-Konsular (https://ekonsular.kln.gov.my) இணையதளத்திலோ பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

விமானப் போக்குவரத்து முடக்கம் மற்றும் வான்வெளி மூடல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்கும் பணிகளைச் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இணைந்து வெளியுறவு அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

அத்தோடு பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், ராணுவ நடவடிக்கைகள் நடக்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவசர காலத் தொடர்புகள் (முக்கிய தூதரகங்கள்):
ஈரான் (Tehran): +98 933 535 2602

சவூதி அரேபியா (Riyadh): 00 966 11 488 7100

ஜெத்தா (Jeddah): +966 573 099 589 (24 மணிநேரம்)

துபாய் (Dubai): +971 50 737 9196

வெளியுறவு அமைச்சக கட்டுப்பாட்டு அறை (Putrajaya): +603-8887 4570 (24 மணிநேரம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here