நீதிமன்ற விசாரணை வரை தனித்து வாழும் தாயின் 3 குழந்தைகள் சமூக நல இலாகாவின் பொறுப்பில் இருப்பார்கள்

பெர்லிஸில் சமய அதிகாரிகளின் பராமரிப்பில் இருந்ததாகக் கூறப்படும் விவாகரத்து பெற்றவரின் குழந்தைகள், சமூக நல இலாகாவில் இருக்கின்றனர் என்று ஒரு NGO தெரிவித்துள்ளது. லோ சிவ் ஹாங்கின் மூன்று குழந்தைகளும் இப்போது கெடா,  ஜித்ராவில் உள்ள   Rumah Taman Sinar Harapan இருக்கின்றனர்.

தனக்கு உதவி செய்து வரும் மலேசியத் தமிழர் குறள் குழு இன்று பகிர்ந்துள்ள அறிக்கையில், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு பிப்ரவரி 21ஆம் தேதி விசாரணைக்கு வருவதற்காகக் காத்திருக்கும் வேளையில், தனது குழந்தைகளை ஜே.கே.எம்.இன் பராமரிப்பில் இருக்க லோ முடிவு செய்துள்ளார்.

இன்று முன்னதாக, அவர் தனது குழந்தைகளுடன் தற்காலிகமாக மீண்டும் இணைந்தார். ஆனால் அவர்கள் பிரச்சினையால் “மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்” எனக் கூறி அவர்களை மீண்டும் ஜேகேஎம் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.

habeas corpus விண்ணப்பம் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் வரை குழந்தைகளை தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்க பெர்லிஸ் நலத்துறை ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கிடையில், பெர்லிஸில் உள்ள சமய அதிகாரிகள் உட்பட வேறு எந்த மூன்றாம் தரப்பினரும் குழந்தைகளை அணுக மாட்டார்கள். அவர்களின் தாயே அவர்களின் ஒரே பாதுகாவலர் என்று NGO கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here