இந்தோனேசியாவில் 11 வயது முதல் 14 வயதுடைய 13 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த சமயப்பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை!

ஜகார்த்தா, பிப்ரவரி 16 :

இந்தோனேசியாவில் 11 வயது முதல் 14 வயதுடைய 13 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த சமயப்பள்ளி ஆசிரியருக்கு, இந்தோனேசிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங்கில் ஹாரி விரவன் தலைமையிலான முஸ்லிம் மாணவர்களுக்கான உறைவிடப் பள்ளி உள்ளது. 2016 முதல் 2021 வரை, அந்த சமயப்பள்ளி ஆசிரியர் 11 முதல் 14 வயது வரையிலான 13 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக எட்டு மாணவிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து போலீசார் ஹெர்ரியை கைது செய்தனர். இந்நிலையில், ஹெர்ரி தன் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் அவர்களது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டார். இறுதியாக, ஹெர்ரிக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here