90களில் பிரபலமான அழகுசாதன நிறுவனத்தை நிறுவியவரின் பேரன் என நம்பவைத்து, பெண்ணிடம் RM37,000 மோசடி

செந்தூல், பிப்ரவரி 17 :

90களில் பிரபலமான  அழகுசாதன (பெர்சனல் கேர் மற்றும் காஸ்மெட்டிக்ஸ்) நிறுவனத்தை நிறுவியவரின் பேரன் என்று கூறிய ஒருவரின் மோசடியில் சிக்கி, பெண் ஒருவர் RM37,000 இழந்துள்ளார்.

நிறுவனத்தின் லோகோவைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்கான பால் மற்றும் கிருமிநாசினிப் பொருட்களைத் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்யச் சொல்லி, பாதிக்கப்பட்டவரை அவர் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்படடவரின் கூற்றுப்படி, 37 வயதான அந்தப்பெண் கடந்த 2019 இல் சிகாம்புட்டில் அந்த நபரை சந்தித்ததாகவும், சந்தேக நபர் அந்த பெண்ணுக்கு தனது நிறுவனத்தின் பங்குகளை தருவதாக உறுதியளித்து, தான் நடத்த விரும்பிய வணிகத்தில் முதலீடு செய்யுமாறு யோசனையை அவரிடம் முன்வைத்தார்.

“உற்பத்தி செய்யப்படும் தயாரிப்பு குழந்தைகளுக்கான பால் மற்றும் 90 களின் பிரபலமான நிறுவனத்தின் லோகோவைப் பயன்படுத்துகிறது போன்ற சலுகையால் ஈர்க்கப்பட்ட பாதிக்கப்பட்டவர், அவரது வணிகத்தில் முதலீடு செய்ய RM20,000 கொடுத்தார்,” என்று அவர் கூறினார்.

மேலும் கடந்த ஆண்டு, அவர் மீண்டும் ஒரு புதிய வணிகத்தை அந்த பெண்ணிற்கு வழங்கியதுடன் கிருமிநாசினி பொருட்களின் விற்பனையிலிருந்து 10 சதவீதம் லாபம் ஈட்டுவதாக உறுதியளித்தார். அதற்கு குறித்த பெண் RM17,000 முதலீடு செய்தார்.

“பாதிக்கப்பட்டவருக்கு முதலீட்டின் லாபத்தை மூன்று மாதங்களுக்குள் திருப்பித் தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை, முதலீட்டிலிருந்து பணத்தை அவரால் திரும்பப் பெற முடியவில்லை என்றும், தற்போது சந்தேக நபர் தன்னை ஏமாற்றிவிட்டதாக சந்தேகிக்கிறார்,” என்றும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் மேல் நடவடிக்கைக்காக செந்தூல் காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.

இதற்கிடையில், செந்தூல் மாவட்ட காவல்துறையின் தலைமை உதவி ஆணையர் பெஹ் எங் லாய், பாதிக்கப்படடவரிடமிருந்து புகார் பெற்றதை உறுதிப்படுத்தினார் மேலும் புகார் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

“விசாரணைக்கு உதவுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் புகார்தாரரிடம் போலீசார் கேட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here