SAINSக்கு சொந்தமான தண்ணீரை திருடிய குற்றச்சாட்டில், உணவக உரிமையாளருக்கு RM5,000 அபராதம் விதிக்கப்பட்டது

சிரம்பான், பிப்ரவரி 18 :

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சாரிக்காட் ஆயர் நெகிரி செம்பிலானுக்கு (SAINS) சொந்தமான தண்ணீரைத் திருடியதற்காக, சிரம்பான் 2ல் உள்ள உணவக உரிமையாளருக்கு, செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று RM5,000 அபராதம் விதித்தது.

SAINS கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் துறையின் தலைவர் நோர்ஜிதா இஸ்மாயில் இதுபற்றிக் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி முகமட் சப்ரி இஸ்மாயில் இந்த அபராதத்தை வழங்கினார் என்றார்.

SAINS ஆல் வளாகத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட பின்னர், நீர் விநியோகத்தை மீண்டும் அனுமதியின்றி எடுப்பது சட்டவிரோதமானது என்பதை சம்பந்தப்பட்ட நபர் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

“வழக்கின் உண்மைகளின் அடிப்படையில், நவம்பர் 29, 2017 அன்று SAINS நடத்திய சோதனையில், நீர் விநியோக உரிமதாரரின் அனுமதியின்றி, வளாகத்தில் வசிப்பவர்கள் மீண்டும் இணைப்பை ஏற்படுத்தினர் அல்லது மீண்டும் தண்ணீர் விநியோகத்தை அனுமதித்துள்ளனர்.

இவ்வழக்கு நீர் சேவைகள் தொழில் சட்டம் 2006 (சட்டம் 65) பிரிவு 89 (9) இன் கீழ் விசாரிக்கப்பட்டது.இந்தப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM50,000 அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

“இந்தக் குற்றச்சாட்டுக்கு, நீதிபதி RM5,000 அபராதம் அல்லது அபராதத்தை செலுத்தத் தவறினால் ஒரு மாதம் சிறைத்தண்டனை விதித்தார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் (SPAN) வழக்கு விசாரணை அதிகாரியால் இவ்வழக்குத் தொடரப்பட்டது என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் விதிக்கப்பட்ட அபராதத்தை அன்றே செலுத்தினார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here