நெகிரி செம்பிலான் மந்திரி பெசாருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருனுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் நாடாளுமன்ற அலுவலகம் இன்று உறுதி செய்துள்ளது.

ஏற்கனவே தனது பூஸ்டர் டோஸைப் பெற்றிருந்த அமினுதீன், தற்போது சுகாதார அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ளார்.

அவர் கோவிட்-19 ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு சென்றார். தவிர ஆர்டிகே ஆன்டிஜென் சுய-பரிசோதனைகளை தவறாமல் செய்து வருகிறார். கடைசியாக திங்கள்கிழமை (பிப்ரவரி 21) அவர் கோவிட்-19 சோதனை செய்தபோது அவருக்கு தொற்று இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன் பின்னரே அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here