நீர் குழாய் பழுது காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள 42 பகுதிகளில் நீர் விநியோகத் தடை

ஷா ஆலமில்  பழுதடைந்த தண்ணீர் பம்ப் காரணமாக கிள்ளான், ஷா ஆலம் மற்றும் சுபாங் ஜெயா முழுவதும் உள்ள 42 பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் புக்கிட் ஜெலுத்தோங்கில் உள்ள அதன் பம்பில் மின்சார அமைப்பு கோளாறு காரணமாக விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நீர் விநியோக நிறுவனமான ஏர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

புத்ரா ஹைட்ஸ், புக்கிட் கெமுனிங் மற்றும் USJ  ஹைட்ஸ் ஆகிய பகுதிகளில் பயனர்கள்  டுவீட் செய்த இன்போ கிராபிக்ஸ் இன்று காட்டப்பட்டது. கடந்த மாதம் சிலாங்கூரில் உள்ள 142 பகுதிகளில் ஷா ஆலமில் தண்ணீர் குழாய் வெடித்ததால் திட்டமிடப்படாமல் தண்ணீர் தடைபட்டது. சமீபத்திய நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்:

கிள்ளான்/ ஷாஆலம்

Bandar Putera, Putra Heights, Bukit Kemuning (Seksyen 32), Jalan Dato Dagang, Jalan Hulubalang, Kemuning Utama (Seksyen 33), Kampung Bkt Lanchong, Bukit Naga, Bulatan Batu 4-8, Jalan Bukit Kemuning, Kampung Kebun Bunga, Kampung Sg Kandis, Seksyen 28, Seksyen 29, Seksyen 30, Taman AMG Batu 5 Bukit Kemuning, Taman Bukit Rimau, Taman Maznah, Taman Putramas, Taman Subang Mas, Desa Latania (Seksyen 36), Jalan Samarinda (Tmn Mesra Indah), Pinggiran Subang USJ 3, Taman Desa Kemuning, Seksyen 22, Seksyen 26, Seksyen 27, Taman Kandis Permai, Jalan Bukit Rimau, Jalan Dato Abd Hamid

பெட்டாலிங்

Pinggiran USJ, Pinggiran USJ 2, Pinggiran USJ 3, Putra Avenue, Putra Harmoni, Putra Setia, Subang Heights, TP7, USJ 3A, USJ 3B, USJ 3C, USJ 3D, USJ Heights

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here