நெகிரி செம்பிலானில் 54 குழந்தை பராமரிப்பு மையங்களை (தஸ்கா) சமூக நலத் துறையில் பதிவு செய்யப்படவில்லை

சிரம்பான், பிப்ரவரி 25 :

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மொத்தம் 54 குழந்தை பராமரிப்பு மையங்கள் (தஸ்கா) சமூக நலத் துறை (JKM) அதிகாரிகளின் அனுமதியின்றி அல்லது பதிவு செய்யாமல் இயங்குவது கண்டறியப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் சமூக நலத் துறை இயக்குநர் ரோஸ்னா சர்டி தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஜனவரி வரையிலான பதிவுகளின்படி, நெகிரி செம்பிலானில் குழந்தைகள் சட்டம் 2001ன் கீழ் 158 குழந்தை பராமரிப்பு மையங்கள் (தஸ்கா) பதிவு செய்யப்பட்டுள்ளன.மேலும் ஜனவரி 2022 வரை மொத்தம் 54 பதிவு செய்யப்படாத குழந்தை பராமரிப்பு மையங்கள் இயங்கிவருகின்றன.

இதில் சிரம்பான் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்படாத குழந்தை பராமரிப்பு மையங்களும் (47) அதனைத் தொடர்ந்து கோலப் பிலா மற்றும் போர்ட்டிக்சனில் தலா இரண்டு குழந்தை பராமரிப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

“பதிவுசெய்யப்பட்ட குழந்தை பராமரிப்பு மையங்களில் 111 சிரம்பான் மாவட்டத்தில் இயங்குகின்றன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இங்குள்ள பண்டார ஸ்ரீ செண்டாயான் பகுதியில், நேற்று ஒரு வயது மூன்று மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று, கழுத்தில் தொட்டில் துணி சிக்கி உயிரிழந்த நிலையில், அந்தக் குழந்தைப் பராமரிப்பு மையம் பதிவு செய்யப்படாதது என உறுதிப்படுத்தப்பட்டதாக ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.

உண்மையில், குழந்தை பராமரிப்பாளர்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு குறித்து அமைக்கப்பட்ட பாதுகாப்பு விதிகளுக்கு அமைவாக குறித்த குழந்தைப் பராமரிப்பு மையம் இணங்கவில்லை என்பது மேலதிக விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும் கருத்து தெரிவித்த ரோஸ்னா, தானும் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளதால், பதிவு செய்யப்பட்ட குழந்தைப் பராமரிப்பு மையங்களை தேர்வு செய்ய பெற்றோர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.

“ஒவ்வொரு ஆண்டும்,சமூக நலத் துறை (JKM) குழந்தைப் பராமரிப்பு மையத்தை பதிவு செய்யுமாறு பிரச்சாரத்தை நடத்தி, குழந்தைப் பராமரிப்பு மையம் நடத்துபவர்கள் பதிவு செய்ய உதவ தயாராக உள்ளது. குழந்தைப் பராமரிப்பு மையம் நிறுவப்பட்டுள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் (PKMD) அவர்கள் பதிவு செய்யலாம்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here