செயற்கை ரப்பர் பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ; 3 தொழிலாளர்கள் காயம்

ஜோகூர் பாரு, பிப்ரவரி 25 :

தஞ்சோங் லாங்சாட் தொழிற்பேட்டையில், நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் செயற்கை ரப்பர் பதப்படுத்தும் தொழிற்சாலையின் இரண்டு தொழிலாளர்கள் தீக்காயம் அடைந்தனர், மற்றொருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

Lotte Ube Synthetic Rubber Sdn Bhd என்ற தொழிற்சாலையில் மாலை 5.16 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவலால், இரண்டு சிமெண்ட் தொட்டிகள் வெடித்துச் சிதறியது. இதனால் தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று ஸ்ரீ ஆலாம் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் சொஹைமி இஷாக் கூறினார்.

இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் பெரிய வெடிச்சத்தத்தைக் கேட்டதும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கட்டிடத்திலிருந்து குதித்த ஒரு தொழிலாளியின் கால் உடைந்ததாகவும், ஏனைய இரு தொழிலாளர்களின் கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்ட அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக பெனாவார் பாசீர் கூடோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் போலீசாருக்கு தகவல் வழங்கியதற்காக, போலீசார் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்த ஒரு நிமிட 14 வினாடிகள் கொண்ட காணொளி, முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் நேற்று வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here