கோலாலம்பூர், பிப்ரவரி 27 :
திரெங்கானு மற்றும் கிளாந்தானில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள SPM தேர்வு மையங்களை நிர்வகிக்க, தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் தெரிவித்துள்ளார்.
“திரெங்கானு மற்றும் கிளாந்தானில் ஏற்பட்ட வெள்ள நிலைமையை நான் கவனிக்கிறேன், இது மாநிலத்தில் உள்ள பல SPM தேர்வு மையங்களையும் பாதித்துள்ளது.
“வெள்ளம் தொடராமல் இருக்கவும், SPM 2021 தேர்வர்கள் பாதுகாப்பான சூழலில் தேர்வு எழுத தயாராக இருக்கவும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்” என்று அவர் தனது முகநூலில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
SPM தேர்வு மார்ச் 2 முதல் 29 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.