கட்டுமான தளத்தில் இருந்த சுவிட்ச் பாக்ஸ் (switch box) வெடித்து, தீப்பிடித்ததில் மூவர் காயம்!

பெட்டாலிங் ஜெயா, 20 :

ஜாலான் டாமான்லேலா, புக்கிட் டாமான்சாரா என்ற இடத்தில் இன்று கட்டுமான தளத்தில் இருந்த சுவிட்ச் பாக்ஸ் (switch box) வெடித்து, தீப்பிடித்ததில் 3 பேர் காயமடைந்தனர்.

காலை 11 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், ஒருவருக்கு உடலில் 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது, மேலும் இருவர் 30 மற்றும் 9 சதவீதம் காயம் அடைந்தனர்.

கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி எஸ். திருக்கையா சாமிநாதன் கூறுகையில், இன்று காலை சுமார் 11.26 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தமது துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், பின்னர் இயந்திரங்களுடன் தீயணைப்பு வீரர்கள் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் கூறினார்.

செந்தூல் மற்றும் ஸ்ரீ ஹர்தாமாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து இரண்டு இயந்திரங்களுடன் மொத்தம் 11 உறுப்பினர்கள் அந்த இடத்திற்குச் சென்றதாக அவர் கூறினார்.

“நாங்கள் அந்த இடத்திற்கு வந்தவுடன், கட்டுமான தளத்தில் இருந்த சுவிட்ச் பாக்ஸில் தீப்பிடித்தது.

எனினும், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, தீ அணைக்கப்பட்டிருந்தது என அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மலேசிய சுகாதார அமைச்சகத்திடம் (MOH) ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here