நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

கோலாலம்பூர், மார்ச் 1 :

நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்த டத்தோஸ்ரீ அசாலினா உத்மான் சைட் பதவி விலகியதைத் தொடர்ந்து, அப்பதவிக்கு ஒருவரை நியமிப்பது தொடர்பில் இன்று நடைபெறவிருந்த நாடாளுமன்ற துணை சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பான பிரேரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு குறித்த பிரேரணையை பிரதமர் திணைக்களத்தின் துணை அமைச்சர் டத்தோ மாஸ் எர்மியாட்டி சம்சுடின் சமர்பித்தார், அவர் இன்றைய உத்தரவுப் பத்திரத்தின் விடயம் எண் 1 மீதான பிரேரணையை அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைக்க முன்மொழிந்தார்.

சபாநாயகரின் உடன்படிக்கையுடன் நிலையியற் கட்டளை 90 (2) இன் அடிப்படையில், துணை சபாநாயகர் தேர்தலை எதிர்வரும் இரண்டாவது கூட்டத்திற்கு ஒத்திவைக்கும் உத்தரவு வழங்கும் பிரேரணை, சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று, அசாலினா பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here