சட்டவிரோத சூதாட்டம் மற்றும் சேவல் சண்டை – 8 இந்தோனேசிய ஆண்கள் மற்றும் ஒரு மலேசிய பெண் கைது

அம்பாங்கில்  சட்டவிரோத சூதாட்டம் மற்றும் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக 8 இந்தோனேசிய ஆண்கள் மற்றும் ஒரு மலேசிய பெண் கைது செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) மதியம் 1.30 மணியளவில் தாமான் கெரமாட் பெர்மாயில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் உள்ள ஒரு இடத்தைப் போலீசார் சோதனை செய்ததாக அம்பாங் ஜெயா OCPD  முகமட் ஃபரூக் எஷாக் தெரிவித்தார்.

நாங்கள் சுமார் 990 வெள்ளி ரொக்கம், ஐந்து சேவல்கள் மற்றும் நான்கு மொபைல் போன்களை கைப்பற்றினோம். கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 52 வயதுடையவர்கள் என்று புதன்கிழமை (மார்ச் 2) தொடர்பு கொண்டபோது அவர் கூறினார். கைது செய்யப்பட்ட இந்தோனேசிய ஆடவர்கள் காலாவதியான கடவுச்சீட்டுகளை கொண்டிருந்தனர் என ACP முகமட் ஃபாரூக் மேலும் தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரியவர்கள் அனைவருக்கும் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்று  சோதனையில் தெரிய வந்துள்ளது.  அவர்கள் மேலதிக விசாரணைக்காக தடுப்புக் காவல் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். இந்த வழக்கு Open Gaming House Act 1953 இன் பிரிவு 7(2) மற்றும் குடியேற்றச் சட்டத்தின் பிரிவு 6(1)(C)) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here