கெடாவின் குனுங் கெரியாங்கில் மலையேறிய மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்

அலோர் ஸ்டார் பகுதியிலுள்ள குனுங் கெரியாங்கில் மலையேறிக் கொண்டிருந்த  மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மண்டலம் 1 தலைவர் வான் முகமட் ஹமிசி வான் முகமட் சின் கூறுகையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 4) மாலை 4.59 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

காலை 6 மணிக்கு மூவரும் தங்கள் நண்பர்களுடன் மலைக்கு சென்றனர். அவர்களது நண்பர்கள் மலையடிவாரத்தில் இறங்கியபோது 3 பேரும் அங்கு இல்லை என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மூன்று பேரையும் இன்னும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.  தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை  என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here