கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி எம்டி நோர் சட்டவிரோத எண்களை விற்பனை செய்யும் மளிகைக் கடைகளின் உரிமையாளர்களை எச்சரித்தார். அவர் கூறுகையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டால் மாநில அரசு சமரசம் செய்யாது. வணிக உரிமத்தை திரும்பப் பெறத் தயங்காது.
எண்களை விற்கும் மளிகைக் கடைகள் இருப்பதாக எனக்குத் தெரியும். ஏனென்றால் அங்கே வாங்குபவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் காத்திருக்கிறோம். ஆனால் நீங்கள் பிடிப்பட்டால் பிறகு தப்பிக்க முடியாது.
நாங்கள் 4 இலக்க எண் கடைகளை மூடியவுடன் விற்பனைக்கு சட்டவிரோத இடம் வந்திருக்கிறது. உங்கள் கடையை காப்பாற்றி கொள்ள நினைத்தால் கைது செய்யப்படுவதற்கு முன் நிறுத்துங்கள் என்று அவர் சனிக்கிழமையன்று பேசுகையில் கூறினார். முஹம்மது சனுசி கூறுகையில், மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டவை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய அவரது கட்சிக்கு அதன் சொந்த அணுகுமுறை உள்ளது.
கெடாவில் சூதாட்ட நடவடிக்கைகளை எதிர்த்து அதை எப்படி செய்வது என்று எனக்குத் தெரியும். சைபர் கஃபே கடைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பவர்களும் இதில் அடங்குவர்.
அவரைப் பொறுத்தவரை, கெடாவை எதிர்காலத்தில் சூதாட்டமற்ற மாநிலமாக மாற்றவும், இதுபோன்ற ஒழுக்கக்கேடான செயல்களை தீவிரமாக ஒழிக்கவும் மாநில அரசு விரும்புகிறது. கடைசி வரை போராடுவோம். கடையை மூட வேண்டாம் என்றால் சூதாட்டத்தை உடனே நிறுத்துங்கள்.