பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுங்கை பூலோ மக்களுக்குச் சேவை தொடரும்: ரமணன் உறுதி

நான் அமைச்சராகவோ அல்லது துணை அமைச்சராகவோ இருந்தாலும் இல்லாவிட்டாலும், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியின் மேம்பாட்டிற்காகவும், மக்களின் நலனுக்காகவும் தாம் மேற்கொண்டு வரும் சேவைகள் எக்காலத்திலும் தடைபடாது என்று மனிதவள அமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதியாக தெரிவித்தார்.

நேற்று இரவு சுபாங், சௌஜானா விடுதியில் நடைபெற்ற ‘சுங்கை பூலோ சமூகத்தினருடன் நோன்பு துறப்பு விழாவில் கலந்து கொண்ட ரமணன் சுமார் 50 தாஃபிஸ் மாணவர்களுக்கு நயோஷுடன் இணைந்து நோன்புப் பெருநாள் அன்பளிப்பும், புத்தாடையும் வழங்கினார்.

தொடர்ந்து பேசிய இரமணன், அரசியல் பதவிகள் வரலாம், போகலாம். ஆனால், என்னை நம்பி வாக்களித்த சுங்கை பூலோ மக்களின் நலனே எனக்கு முக்கியம். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நான் என்றும் உறுதுணையாக இருப்பேன் என தொகுதி மக்களிடம் நம்பிக்கைத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கிக் தொழிலாளர் நலனில் கூடுதல் மேம்பாடுகள் அமையும் எனவும் உறுதியளித்தார்.

ராமேஸ்வரி ராஜா
எஸ். சண்முகம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here