ரவாங், சுங்கை பூலோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு

ரவாங், மார்ச் 7:

இன்று (மார்ச் 7) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், ரவாங்கின் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர், நோராஸாம் காமிஸ் கூறுகையில், கம்போங் கோம்பாக், கம்போங் மலாயு ஶ்ரீ குண்டாங் மற்றும் கம்போங் சுங்கை செராய் ஆகிய நான்கு பகுதிகள் இங்கு திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

அவர் கூறியபடி, கம்போங் கோம்பாக்கில் பிற்பகல் 3.34 மணியளவில் அவரது துறையினருக்கு அவசர அழைப்பு வந்தது என்றும் அதனைத் தொடர்ந்து மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்றும் கூறினார்.

“அதிஉயர் நிலப்பரப்பிலுள்ள நீர் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் இறங்கியதால், மூன்று வீடுகள் திடீர் வெள்ளத்தில் மூழ்கின.

“0.3 மீட்டர் உயரமான நீர் குடியிருப்புக்குள் நுழையவில்லை, மேலும் தற்போது நீர் மட்டம் குறைந்து வருவது கண்டறியப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த திடீர் வெள்ளத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும், இதுவரை யாரும் தமது வீடுகளிலிருந்து வெளியேற்றம் செய்யப்படவில்லை என்றும் நோராஸாம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here