அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலைய மின்சார படிகட்டில் (escalator) ஏற்பட்ட தீ

அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையத்தில் உள்ள மின்சார படிக்கட்டில்  (escalator) திங்கள்கிழமை அதிகாலை தீப்பிடித்தது. இன்று ஒரு அறிக்கையில், இந்த சம்பவம் அதிகாலை 5.16 மணியளவில் நிகழ்ந்ததாக நகர தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

எஸ்கலேட்டரில் இருந்து கூரை வரை தீ பரவியது. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் சிக்கவில்லை காரணம் இன்னும் விசாரிக்கப்படுகிறது என்று அது கூறியது.

Dang Wangi OCPD Asst Comm Noor Dellhan Yahaya ஐ தொடர்பு கொண்டபோது, ​​நிலையத்தில் இருந்து புகை வெளிவந்ததை அடுத்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கண்ட்ரோல் பேனல் ஒன்றில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ரயில் நிலைய நிர்வாகம் எஸ்கலேட்டரை மூடியுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here