கஞ்சாவை விநியோகித்த குற்றச்சாட்டில் வாகனம் பழுதுபார்ப்பவருக்கு தூக்கு தண்டனை!

மலாக்கா, மார்ச் 9 :

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 615.5 கிராம் எடையுள்ள கஞ்சாவை விநியோகித்த இரண்டு குற்றங்களுக்காக, வாகனம் பழுதுபார்ப்பவர் ஒருவருக்கு உயர் நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்தது.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ அகமட் நஸ்ஃபி யாசின், குற்றஞ்சாட்டப்பட்ட 26 வயதான இசாத் அஸ்னாவே நூர் அசாமிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தற்காப்பு வாதத்தின் முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு நியாயமான சந்தேகங்களை எழுப்பத் தவறியதைக் கண்டறிந்த பின்னர், அவர் இந்த தீர்ப்பை வழங்கினார்.

“குற்றம் சாட்டப்பட்டவரின் சாட்சியம் மற்றும் மறுப்பு என்பன மறுபரிசீலனை செய்யப்பட்டது. தவறான விஷயங்கள் எதுவும் தான் செய்யவில்லை என்றும் போதைப்பொருள் இருந்த இடம் அவருக்கு வெகு தொலைவில் உள்ளது என்று கூறியபோது அவரது சாட்சியம் சீரற்றதாக உள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

“மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டபோது, பதப்படுத்தப்பட்ட 10 கஞ்சா கட்டிகள் மற்றும் ஒரு பிளாஸ்டிக் வெட்டும் கருவியுடன் ஒரு அறையில் அமர்ந்திருந்ததை சுட்டிக்காட்டியது,” என்று அவர் கூறினார்.

முதல் மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளின்படி, ஜூன் 1, 2017 இரவு 8.30 மணியளவில் ஜாலான் மாலிம், தாமான் பங்சாபுரி மாலிம் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் மொத்தம் 615.5 கிராம் கஞ்சாவை விநியோகித்ததாக இசாத் அஸ்னாவே மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் செயலுக்காக, குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஆபத்தான மருந்துச் சட்டம் (ADB) 1952 இன் பிரிவு 39B (1) (a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது மற்றும் இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதே சட்டத்தின் 39B (2) இன் கீழ்கட்டாய மரண தண்டனையை வழங்க முடியும்.

மற்றைய குற்றச்சாட்டில் அதே இடம், நேரம் மற்றும் தேதியில் 166.46 கிராம் கஞ்சா வைத்திருந்ததற்காக அதே சடடத்தின் பிரிவு 39A (2) இன் கீழ் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10 பிரம்படிகளும் மேலும் 5.2 கிராம் மெத்தாம்பெட்டமைன் மற்றும் 0.10 கிராம் நிமெட்டாசெபம் வைத்திருந்ததாக பிரிவு 12 (2) இன் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

ஜூன் 1, 2017 அன்று குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து அனைத்து சிறைத் தண்டனைகளும் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படும் என்றும் தீர்ப்பில் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

ஜூன் 17, 2019 அன்று தொடங்கிய வழக்கின் விசாரணையின் போது, ​​மொத்தம் 8 அரசுத் தரப்பு சாட்சிகள் சாட்சியமளித்தனர், அதே நேரத்தில் பிரதிவாதி தரப்பில் ஒரு சாட்சியம் குற்றம் சாட்டப்பட்டவரும் சாட்சியமளித்தனர்.

இந்த வழக்கை அரசு துணை வழக்கறிஞர் முசிலா முகமட் அர்சாத் தொடர்ந்தார், குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஆர் சுபாஷ் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here