சாலை விபத்தில் தமக்கை உயிரிழந்தார் – தம்பிக்கு கால் உடைந்தது

சிலிம் ரிவர்: கம்போங் ராசாவ் அருகே இன்று காலை லோரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில்  இளம்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது  தம்பிக்கு கால் முறிந்தது. காலை 11.30 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 17 வயதுடைய நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முஅல்லிம் மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் கூறுகையில், சிலிம் ரிவர் கிராமத்திலிருந்து சிலிம் ஆற்றை நோக்கிச் செல்லும் வழியில் தனது 15 வயது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​ஹோண்டா RS150 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒரு லோரியை முந்திச் செல்ல முயன்றதாக நம்பப்படுகிறது. ஆனால் எதிர் திசையில் இருந்து மற்றொரு வாகனம் வந்துள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் எதிரில் வந்த  வாகனத்தில் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் லோரி மீது உராய்ந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லோரியின் பின் டயரில் விழுந்து அவரது இடது கால் உடைந்ததாகவும், அதே வேளையில் பின்னால் அமர்ந்து சென்றவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் சுலிஸ்மி அஃபெண்டி கூறினார்.

34 வயதான லோரி ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை என்றும், கோவிட்-19 சோதனை நடத்தப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிலிம் ரிவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என்றும் அவர் கூறினார். சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here