மலாக்கா, ஜாசினில் திடீர் வெள்ளம்; 3 கிராமங்கள் பாதிப்பு

மலாக்கா, மார்ச் 9 :

மலாக்கா, ஜாசினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 40 பேர், தற்போது ஜாசினில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் (APM) லெப்டினன்ட் கர்னல் (PA) Cuthbert John Martin Quadra இதுபற்றிக் கூறுகையில், சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஜாசினில் உள்ள மூன்று கிராமங்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களாக கம்போங் பாரிட் பெங்குலு (6 வீடுகள்) , கம்போங் தெர்சுசூன் ரம்பாய் ஜெயா (4 வீடுகள்) மற்றும் கம்போங் லான்சாங் (ஒரு வீடு) அடங்கும்.

” வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், பாதிக்கப்பட்டவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டியிருந்தது, எனவே நேற்று மாலை 7 மணிக்கு செக்கோலா கேபாங்சான் பாரிட் பெங்குலுவில் தற்காலிக வெள்ள நிவாரண மையத்தை திறந்தோம்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று, கம்போங் ரிம், கம்போங் செண்டரா, கம்போங் கேபிஸ், கம்போங் பாடாங் மலாக்கா மற்றும் கம்போங் தெரெந்தாங் ஆகிய ஐந்து குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் அங்கு வெள்ள நீர் வடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், மலாக்கா தெங்கா மற்றும் அலோர் காஜா ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here