4 வயது சிறுவன் காணாமல் போனது தொடர்பில், நால்வர் கைது!

கூச்சிங், மார்ச் 11 :

இங்குள்ள பிண்டாவாவில் உள்ள ஜாலான் தயாவில் எரிக் சாங் வெய் ஜீ என்ற நான்கு வயது சிறுவன், தனது வீட்டில் இருந்து காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில், முறையே நான்கு உள்ளூர்வாசிகள், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் கடந்த மார்ச் 7ஆம் தேதி, இரவு சுமார் 7.42 மணியளவில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கூச்சிங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹ்ஸ்மோன் பாஜா கூறினார்.

கைதுசெய்யப்பட்டவர்களின் கடந்த கால குற்றப் பதிவுகளை மீளாய்வு செய்ததன் விளைவாக, சந்தேகநபர்கள் அனைவருக்கும் 17 முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளன, அதில் 14 போதைப்பொருள் குற்றங்கள், இரண்டு சொத்துக் குற்றங்கள் மற்றும் ஒரு வணிகக் குற்றம் என்றார்.

சிறுநீர்பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில், சந்தேகத்திற்குரியவர்கள் அனைவருக்கும் சியாபு வகை போதைப்பொருளுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

“சந்தேக நபர்கள் அனைவரும் கூச்சிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டு, மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.

காணாமல் போன குழந்தை தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தர முன்வருமாறும் அல்லது விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ஹஸ்மா அப்துல் ஜலீலை 013-6852210 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக் கொண்டார்.

மேலும், இந்த வழக்கு குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here